இராமநாதபுரம் அருகே மயானத்திற்கு சாலை வசதி செய்துதர கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம் திரு உத்திரகோசமங்கையை அடுத்த கடம்பன் குடி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி கிராம மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர், கிராமத்தில் உள்ள மயானத்திற்கு உயிரிழந்தவர்கள் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்வதற்கு சாலை வசதிகள் இல்லாததால் தனியார் வயல்வெளிலியில் தூக்கிச் செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது விவசாய காலம் என்பதனால் நெற்கதிர்கள் உள்ள நிலங்களுக்குள் இறந்தவர்கள் உடலை தூக்கிச் சென்று மயானத்தில் அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளதாகவும் மாயனத்திற்கு சாலை வசதிகள்100 நாள் வேலை வேண்டியும் மற்றும் பல்வேறு கோரிக்கையை நிறைவேற்றித் தரக்கோரியும், மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் கலோனிடம் மனு அளித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக