குடியாத்தம் அருகே இளம்பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை முயற்சி உயிருடன் மீட்பு!
குடியாத்தம் ,ஜன,17 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் 15 சீவூர் மதுரா திருநகர் 2 வது தெருவில் அமைந்துள்ள பயன்பாட்டில் இல்லாத பொது கிணற்றில் இன்று 17-01-2025 காலை சுமார் 09.00 மணியளவில் அமீதுன் த/பெ ஊஸ்த்து (வயது 28) என்பவர் குடும்பப் பிரச்சினை காரணமாக மேற்படி கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மேற்படி நபரை காப்பாற்றி குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து நலமுடன் உள்ளார். இந்நிகழ்வில் திருநகரில் வசிக்கும் பொதுமக்கள் திறந்த வெளியில் உள்ள பொது கிணற்றை கம்பி வலை அமைத்து பாதுகாக்க கோரி இன்று காலை 11.00 மணி முதல் முதல் 11.15 மணி வரை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஆண் 40 பெண் 25 ஆக மொத்தம் 65 நபர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேற்படி நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் காவல் துறையினர் கிணற்றுக்கு கம்பி வலை அமைத்து தருவதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக