நெமிலி அருகே வெளிதாங்கிபுரம் ஊராட்சி சார்பில் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு சாலை பாதுகாப்பு முன்னிட்டு இனிப்புகள் வழங்கி வாழ்த்து! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வெள்ளி, 24 ஜனவரி, 2025

நெமிலி அருகே வெளிதாங்கிபுரம் ஊராட்சி சார்பில் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு சாலை பாதுகாப்பு முன்னிட்டு இனிப்புகள் வழங்கி வாழ்த்து!


ராணிப்பேட்டை ,ஜன 24-
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம், பாணாவரம் அடுத்த வெளிதாங்கிபுரம் ஊராட்சியில் ஓட்டுநர் தினத்தை முன்னிட்டும் வரும் 31ம் தேதி வரை நடைபெறும் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வை முன்னிட்டும், ஊராட்சி மன்ற தலைவர் மு.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் காஞ்சிபுரத்திலிருந்து வெளிதாங்கிபுரம் வரை வந்த அரசு பேருந்து மற்றும் அரக்கோணத்தில் இருந்து பாணாவரம் வரை இயக்கப்படும் அரசு பேருந்து மற்றும் பல்வேறு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு ஊராட்சி மன்றம் சார்பில் சால்வை அணிவிக் கப்பட்டு இனிப்பு வழங்கி அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அப்போது வார்டு உறுப்பினர். ஜெயம்மாள் செல்லப்பன், லோகநாதன் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். வெளிதாங்கிபுரம் ஊராட்சியின் நலனை பாதுகாக்கும் பொருட்டு எங்கள் கோரிக்கை ஏற்று பஸ் சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் மற்றும் உயர் போக்குவரத்து அதிகாரிகள் அனைவருக்கும் வெளிதாங்கிபுரம் ஊராட்சி சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட 
செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad