இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே ராமேஸ்வரத்தை சேர்ந்த சுற்றுலா வேனும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்து.
இராமநாதபுரம்கோடி அருகே சுற்றுலா வேனும் காரும் மோதி கொண்டதில் பலர் காயம் போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல் என தொடர்ந்து விடுமுறை விடப்பட்டது இதனால் வெளி ஊர்களில் இருந்து இராமேஸ்வரம் தனுஷ்கோடி க்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இராமநாதபுரம் முதல் தனுஷ்கோடி வரையில் இருவழி சாலையாகவே உள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே ரோடு அகலப்படுத்தி உள்ளன அங்கும் சரியான மின் விளக்குகள் முன்னெச்சரிக்கை பதகைகள் இல்லாததால் அடிக்கடி தொடர்ந்து விபத்துகள் ஏற்படுகிறது. இன்று தனுஷ்கோடி அருகே ராமேஸ்வரத்தை சேர்ந்த சுற்றுலா வேனும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. பலர் காயங்களுடன் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இரண்டு தினங்களுக்கு முன் இரு சாலை விபத்து நடந்துள்ளது இதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இராமநாதபுரத்தில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது மாவட்ட காவல்துறை அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது கோரிக்கை வைக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக