சேலம் மாவட்டம் தாரமங்கலம் செங்குந்தர் செவிலியர் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மேட்டூர் உதவி கலெக்டர் பொன்மணி குத்துவிளக்கு ஏற்றி வைத்து கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது மக்களாட்சியின் மீது பற்று கொண்ட குடிமக்களாகிய நாம், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், இனம், மொழி, வகுப்பு ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமல் வாக்களிப்போம் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் ஓமலூர் தாசில்தார் ரவிக்குமார், தாரமங்கலம் வருவாய் ஆய்வாளர் சரிதா, கிராம நிர்வாக அலுவலர் திரவிய கண்ணன், செங்குந்தர் கல்விக்கழக தலைவர் சக்தி கந்தசாமி, பொருளாளர் அமிர்தலிங்கம், நர்சிங் கல்லூரி இணைச் செயலாளர் ரகுபதி, கல்வி கழக ஆலோசகர் ரவி, கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக