உளுந்தூர்பேட்டை நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி கிழக்கு கந்தசாமிபுரம், மற்றும் பெருமாள் கோயில் தெரு பகுதியில் உள்ள நியாய விலை கடையில் தமிழ்நாடு முதல்வர் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு அவர்கள் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு பொருட்களை வழங்கினார் இதில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் டேனியல்ராஜ், நகர மன்ற உறுப்பினர்கள் கலா சுந்தரமூர்த்தி, மாலதி இராமலிங்கம், செல்வகுமாரி இரமேஷ்பாபு, குமரவேல், முருகவேல், சிவசங்கரி சந்திரகுமார், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் மொட்டைய நாயக்கர், மற்றும் வார்டு நிர்வாகிகள் ரமேஷ், பாலன், கோபி, சிவக்குமார், விற்பனையாளர் ஏழுமலை உள்ளிட்ட கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விஜயகாந்த் தமிழக குரல் இணையதள செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக