நாமக்கல் அரசு கல்லூரியில் தாவரவியல் கருத்தரங்கம் !
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தாவரவியல் துறையின் சார்பில் பயோ மிமிக்ரி என்னும் தலைப்பில் தாவரவியல் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் இராஜா தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாவை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் எழிலி கலந்துகொண்டு தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் எவ்வாறு தங்களுடைய செயல் மற்றும் அமைப்புடன் மற்ற உயிரினங்களை பிரதிபலிக்கின்றன என்பதை எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பாக பயின்று வரும் மாணவ, மாணவியருக்கும் வகுப்பு பிரதிநிதிகளுக்கும் ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. கடந்த கல்வியாண்டில் பல்கலைக்கழக அளவில் தரம் பெற்ற நந்தினி தேவி என்ற முது அறிவியல் தாவரவியல் மாணவியை இந்நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டார் . இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி தாவரவியல் துறை தலைவர் இராஜேஸ்வரி மற்றும் தாவரவியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் தாவரவியல் இணை பேராசிரியர் சுப்பிரமணியன் நன்றி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறையை சார்ந்த துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியரல்லா அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நாமக்கல் செய்தியாளர் பார்த்திபன் மற்றும் நாமக்கல் மாவட்ட தமிழர் குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக