நெடுகுளா- தேயிலை வாரியம் கலந்துரையாடல் பயிற்சி பட்டறை.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நெடுகுளா ஹட்டியில் தென்னிந்திய தேயிலை வாரியம் சார்பில் தேயிலை விவசாயிகளுடன் கலந்துறையாடல் மற்றும் ஒருநாள் பயிற்சிப்பட்டறை நடைபெற்றது. இதில் தேயிலை வாரிய செயல் இயக்குனர் மற்றும் அதிகாரிகள் நெடுகுளா ஊர் தலைவர் பொதுமக்கள் மற்றும் தேயிலை விவசாயிகள் கலந்துகொண்டனர். தேயிலை விவசாயத்தை ஊக்குவிக்க தேயிலை வாரியத்தின் பணி விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் தேயிலை விவசாய குழுக்களுக்கு கிடைக்கும் சலுகைகள் மற்றும் இந்திய தேயிலை வாரியத்தினால் கிடைக்கும் அனைத்து நன்மைகள் பற்றி விவரித்து பெரிய தேயிலை தோட்ட விவசாயிகள் மட்டுமே தேயிலை வாரியத்தின் பயன்களை அனுபவித்து வருவதாகவும் சிறு விவசாயிகளுக்கு விவரம் தெரியவில்லை ஆகையால் தான் இதுபோன்ற பயிற்சி பட்டறைகள் மற்றும் சிறு தேயிலை விவசாயிகளுடன் கலந்துறையாடல் நடத்தி அரசின் திட்டங்கள் பற்றி சிறு தேயிலை விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பயன்பாடுகள் சென்றடையும் பணியை செய்வதாகவும் தேயிலை வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். பங்குபெற்ற விவசாயிகள் தங்களுக்கு பயனுள்ளதாகவும் இதுவரை தெரியாமல் இருந்தது இனிமேல் தேயிலை வாரியத்தின் மானிய பலன்களை பெறுவோம் எனவும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக