தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசுத் தொகுப்பை விநியோகத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூரில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி மற்றும் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி
திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட எட்டாவது வார்டு நாடார் தெரு முகப்பு மற்றும் ஆலந்தலை சுனாமி நகர், கணேசபுரம், கந்தசாமி புரம் உள்ளிட்ட பகுதியில் நியாய விலை கடைகளில் திருச்செந்தூர் நகர்மன்ற தலைவர் சிவ ஆனந்தி பொங்கல் தொகுப்பு பொருட்களை வழங்கினார்.
இதேபோல் சுனாமி இந்நிகழ்ச்சியில் எட்டாவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் கிருஷ்ணவேணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக