தமிழியக்கம் - விவாதமேடை
தமிழியக்கம் மற்றும் நீலகிரி மாவட்டம் மைய நூலகம் வாசகர் வட்டம் சார்பாக இன்றைய சூழலில் சமூக வலைதளம் வரமா? சாபமா? என்ற தலைப்பில் விவாதமேடை நீலகிரி மாவட்ட மைய நூலகத்தில் அரங்கேறியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்விற்கு தமிழியக்கம் ஒருங்கிணைப்பாளர் ரமணா சுரேஷ் அனைவரையும் வரவேற்றார். நூலகர் ரவி தலைமை வகித்தார். தானிஷ் கல்லூரி மற்றும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் கலந்துக் கொண்ட விவாத மேடையில் தமிழியக்கம் செயலாளர் புலவர் இர.நாகராஜ் நடுவராக பங்குப் பெற்றார். நீலகிரி எஜிகேஷனல் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் ஜாபர் நன்றி நவில நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக