மானாதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பிரபல தனியார் பள்ளியான பாபா மெட்ரிக் பள்ளியில் 'அறிவியல் கண்காட்சி' சனிக்கிழமையன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட அறிவியல் சார்ந்த மாதிரிகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.
கூடுதலாக இக்கண்காட்சியில் வங்கி ஏ.டி.எம், பாம்பன் பாலம், நீர் சுத்திகரிப்பு கருவி, எரிமலை வெடிப்பு, ராக்கெட், மின்னாற்றப் பகுப்பு, மின் காற்றாலை, இதயம், நுரையீரல் போன்றவற்றின் மாதிரிகளை பள்ளி மாணவர்கள் செய்திருந்தனர். மேலும் சாதனங்களின் செயல்பாடுகள் குறித்து விபரங்களை குழந்தைகள் மிக சிறப்பாக பெற்றோர்களுக்கு விளக்கினர். குழந்தைகளின் ஆர்வத்தை பெற்றோர்கள் மிக அருமையாக ஊக்கப்படுத்தினர்.
இவ்விழாவில் சிறந்த மாதிரிகளை தேர்ந்தெடுக்க நடுவர்களாக ஆர்.சி பள்ளி ஆசிரியர்கள் திருமதி சூசை சகாயமேரி மற்றும் திருமதி ரீட்டா ஆகியோர் வருகை புரிந்து, சிறப்பாக அமைந்த முதல் மூன்று அறிவியல் சாதனங்களை தேர்ந்தெடுத்தனர். குழந்தைகளின் திறமைகளையும் அவர்களின் ஈடுபாட்டையும் வெகுவாக பாராட்டினர்.
மேலும் பள்ளியின் நிறுவனர் அம்மா பி. ராஜேஸ்வரி அவர்கள் தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் திரு ஆர். கபிலன் அவர்கள் முன்னிலை வகித்தார். பள்ளியின் நிர்வாகி திருமதி ஆர். மீனாட்சி அவர்கள் பரிசுகள் வழங்கினார். இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகளை பள்ளியின் முதல்வர் திருமதி எம். சாரதா அவர்கள் மேற்கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக