மானாமதுரை நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 3 ஜனவரி, 2025

மானாமதுரை நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

 

IMG-20250103-WA0008

மானாமதுரை நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப அவர்கள் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகளை ஆய்வு மேற்கொண்டார். மேலும் நிறைவு பெற்ற பணிகள் மற்றும் நடைபெற்றுக் கொண்டுள்ள இதர பணிகள் குறித்தும் கலந்தாலோசித்து பொதுமக்கள் அளித்த புகார்கள் மற்றும் எதிர்கொள்ளவிருக்கும் திட்ட வளர்ச்சி பணிகளின் தற்போதைய சூழல் நிலவரம் மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும் கேட்டரிந்தார். ஈடுபட்டார். 


இந்நிகழ்வில் திமுக நகர செயலாளர் க. பொன்னுசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர் மன்ற தலைவர் திரு எஸ் மாரியப்பன் கென்னடி, துணை தலைவர் பாலசுந்தர், நகராட்சி பொறியாளர், நகராட்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நகர் மன்ற உறுப்பினர்கள், வருவாய் அலுவலர்கள், ஆட்சியர் அலுவலக உதவியாளர்கள், திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad