சாலைகளில் தொடர்ந்து வரும் புலிகளால் மக்கள் அச்சம்
நீலகிரி மாவட்டம் மஞ்சூருக்கு உட்பட்ட ஒரு சில பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து புலிகள் சாலையில் வருவதால் அங்கு வசிக்கும் மக்களும் சாலைகளில் பயணம் செய்யும் பயணிகளும் பள்ளி குழந்தைகளும் அச்சத்தில் உள்ளனர். தொடர்ந்து புலி நடமாட்டம் இருப்பதால் அங்கு வசித்து வரும் மக்கள் வேலைகளுக்கும் மற்றும் பள்ளிக் குழந்தைகள் பள்ளிகளுக்கும் சென்றுவர அச்சமடைகின்றனர். இதனை வனத்துறையினர் உடனடியாக பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சுற்றி திரியும் புலி மற்றும் அதன் குட்டிகளை கூண்டு வைத்து பிடித்து மக்களின் இயல்பு வாழ்வாதாரத்திற்கு திரும்ப வழி காட்டுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக