நடுவட்டம் யுஎஸ்ஐபி மனித உரிமைகள் அணி தங்கமகன் விருது வழங்கும் விழா.
யு எஸ் ஐ பி மனித உரிமைகள் அணி தங்க மகன் விருது வழங்கும் விழா நீலகிரி மாவட்டம் நடுவட்டம் இந்திரா நகர் காலனியில் நடைபெற்றது. யூ எஸ் ஐ பி மனித உரிமைகளின் அணி தேசிய தலைவர் திரு. செல்வ கணேசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி விவசாயிகளுக்கு தங்க மகன் விருது விழா நீலகிரி மாவட்ட யூ எஸ் ஐ பி மனித உரிமைகளின் தலைவர் திரு . பாபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. குன்னூர் நகர மன்ற தலைவர் மற்றும் ணகுன்னூர் மகளிர் அணி தலைவர் மற்றும் நடுவட்டம் பேரூராட்சி யூஎஸ்ஐபி தலைவர் திரு.வெங்கடேசன் மற்றும் நடுவட்டம் ஒன்றிய செயலாளர் மனித உரிமைகளின் அணியின் செயலாளர் திரு. சாம் திரு. பரமசிவம் மற்றும் நடுவட்டம் 13வது வார்டு தலைவர் திரு. இயேசு மற்றும் நடுவட்டம் பேரூராட்சி சேர்மன் திரு. கலியமூர்த்தி மற்றும் இந்திரா நகர் காலனி கவுன்சிலர்கள் மற்றும் அனுபவம் காலனி கவுன்சிலர்கள் மற்றும் உறுப்பினர்கள் நிர்வாகிகள் மற்றும் அந்தப் பகுதியின் விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு யூ எஸ் ஐ பி மனித உரிமைகள் அணி கொடி மரம் நடும் விழாவும் நடைபெற்றது இந்த விழாவில் அனைவரும் கலந்து கொண்டு அனைத்து விவசாயிகளுக்கும் தங்க மகன் விருதுகள் வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து யு எஸ் ஐ பி மனித உரிமைகளின் அணி நீலகிரி மாவட்ட தலைவர் திரு. பாபு அவர்கள் மனித உரிமைகளைப் பற்றி மிகச் சிறப்பாக எடுத்துக் கூறினார்கள் அந்தப் பகுதியில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் என்று மிக சிறப்பாக கூறினார். குன்னூர் நகர தலைவரும் பேசினார் குன்னூர் usip மகளிர் அணி தலைவி சிறப்புரை ஆற்றினார் நடுவட்டம் பேரூராட்சி சேர்மன் மக்கள் உரிமைகளை பற்றி மிகச் சிறப்பாக வாழ்த்துக்களை தெரிவித்தார் அந்தந்த பகுதி கவுன்சிலர்கள் மனித உரிமைகளைப் பற்றி மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று வாழ்த்துக்களை தெரிவித்தனர் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டு அந்த விழா இனிதே நிறைவடைந்தது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K .A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக