வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வாழ்த்து - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

ஞாயிறு, 12 ஜனவரி, 2025

வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வாழ்த்து

IMG-20250110-WA0001

இந்திய பள்ளி குழும தேசிய அளவிலான 2023 - 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி. இ.ஆ.ப., அவர்கள் வாழ்த்து.


இந்திய பள்ளி குழும தேசிய அளவிலான 2023 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்களை 08.01.2025 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


இந்திய பள்ளி குழும தேசிய அளவிலான 2023 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான ஸ்குவாஷ் போட்டியில் சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் செல்வி டி.பிரியதர்ஷினி அவர்கள், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் முதலிடமும், செல்வி டி.நித்யஸ்ரீ அவர்கள். 14 வயதுக்குட்பட்ட பிரிவில் 2-ஆம் இடமும், தனிப்பிரிவில் 3-ஆம் இடமும் பெற்றுள்ளனர்.


அதேபோன்று இந்திய பள்ளி குழும தேசிய அளவிலான 2023 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான கபாடிப் போட்டியில் சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி எஸ்.காருண்யா அவர்கள் முதலிடமும் பெற்றுள்ளார்.


மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் 07.01.2025 அன்று சென்னையில் இம்மாணவிகளைப் பாராட்டி செல்வி டி.பிரியதர்ஷினி அவர்களுக்கு ரூ.1.20 இலட்சத்துக்கான காசோலையினையும். செல்வி டி.நித்யஸ்ரீ அவர்களுக்கு ரூ.1.90 இலட்சத்துக்கான காசோலையினையும், செல்வி எஸ்.காருண்யா அவர்களுக்கு காசோலையினையும் வழங்கினார்கள். 15.1.00 இலட்சத்துக்கான


இதனைத்தொடர்ந்து இம்மாணவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி. இ.ஆ.ப., அவர்களை 08.01.2025 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.மு.கபீர். பள்ளி தலைமையாசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad