நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் கோத்தகிரி : - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 12 ஜனவரி, 2025

நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் கோத்தகிரி :

IMG-20250112-WA0141

12.1.2025ம் தேதி மாலை 3 மணிக்கு கோத்தகிரிநுகர்வோர் பாதுகாப்பு சங்கம் செயற்குழு கூட்டம் 


கோத்தகிரி பேருந்து நிலைய முன் உள்ள அன்பு மேடை விரிவாக்கத்தில் திரு டி பி கே நாகேந்திரன் தலைவர் தலைமையிலும்திரு மு பாலகிருஷ்ணன் பொதுச் செயலாளர் அவர்கள் முன்னிலையிலும் மற்றும் சங்க நிர்வாகிகள்துணைத் தலைவி ஏ ராஜேஸ்வரி துணைத் தலைவர் திரு சுந்தர்ராஜ் இணைச் செயலாளர் திரு பி ராஜா இணைச் செயலாளர் திரு ரங்கராஜ் செயற்குழு உறுப்பினர்கள் திருகிருஷ்ணன் மற்றும் ஆட்டோ செல்வம் பிவி பிரபாகரன் பொருளாளர் பரமேஷ்விவேக்திருமதி அன்னம்மாள் திரு குணசேகரன்பி பி கிருஷ்ணன்திரளாக கலந்து கொண்டனர் கலந்து செயற்குழு உறுப்பினர்கள்  கலந்து கொண்டுகீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன1பேருந்து நிலையம் முன்பகுதியில் காலியிடமிருந்தும் ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தும் இதனால் வரை காவல்துறை கயிறு கட்டி அந்த இடத்தை பொதுமக்களுக்கு பண்பாட்டிற்கு விடாமல் இருப்பது பெரிதும் வருத்தத்துக்குரியது என ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் காலாண்டு கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது

2டானிக் டென் பகுதியில் அந்தந்த கடை உரிமையாளர்கள் அவர்கள் கடை முன் வானங்கள் நிறுதியும் கடையின் முன் பகுதியை விரிவாக்கம் செய்து வியாபாரம் செய்து கொண்டிருப்பதால் அப்பகுதியாக வரும் பொது போக்குவரத்துக்கு இடையூறாகவும் பொது ஜனங்கள் நடந்து செல்ல மிகவும் இடையூறாக உள்ளதால் உடனடியாக அந்த வாகனங்களை அங்கு நிறுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுத்தும் கடைகளை விரிவு படுத்தியதை கண்காணித்து தகுந்த நடவடிக்கை எடுத்து பொது போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஏற்படுத்த வேண்டும் என்று ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது


3கோத்தகிரியிலிருந்து கோடநாடு செல்லும் சாலை குறிப்பாக செம்மண் முடக்கு பகுதியில் குயிலாக குவிலாக விறகுகளை அடக்கி சாலை ஓரத்தில் வைப்பதால் அந்த வளைவுகளில் எதிர்பக்கம் வரும் வாகனங்கள் வருவதை பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது எனவே அந்த விறகுகளை அப்புறப்படுத்தி அப்பகுதியில் பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தகவல் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது


4கோத்தகிரி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வேகத்தடை அகற்றியதை மீண்டும் புதுப்பித்து அந்தந்த இடத்தில் வேகத்தடை அமைத்ததை வெகுவாக பாராட்டி அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது


அரசு மருத்துவமனைக்கு வெளி நோயாளிகள் அதிகம் வந்து சிகிசைக்கா வரும் பொழுதுபோதிய மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் மிகவும் அவதியுற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை பெறாமலும் பெரும் துயரத்திற்கு ஆளாகி இருக்கின்றார்கள் ஆகவே உடனடியாக போதிய மருத்துவரை கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு நியமிக்க வேண்டும் என ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது


தொடர்ந்து பல கோரிக்கைகள் முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றி இறுதியில் திரு T.P.K நாகேந்திரன் தலைவர் நன்றி கூறி கூட்டம் இனிதே நிறைவேறியது


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தி ஒருங்கிணைப்பாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad