கந்தர்வகோட்டை அருகே வானவில் மன்றத்தின் சார்பில் தேசிய பறவைகள் தினம் கடைப்பிடிப்பு - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வியாழன், 9 ஜனவரி, 2025

கந்தர்வகோட்டை அருகே வானவில் மன்றத்தின் சார்பில் தேசிய பறவைகள் தினம் கடைப்பிடிப்பு

IMG-20250109-WA0205

 கந்தர்வகோட்டை அருகே வானவில் மன்றத்தின் சார்பில் தேசிய பறவைகள் தினம் கடைப்பிடிப்பு 


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வானவில் மன்றத்தின் சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் தேசிய பறவைகள் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். கணித ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா தேசிய பறவைகள் தினம் குறித்து பேசும் பொழுது


பறவைகள் இனம் அழிந்து வருவதை தடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஜனவாி 5-ஆம் தேதி தேசிய பறவைகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


பறவைகளைப் பாதுகாப்பது, வளா்ப்பது, வளா்ப்போருக்கு உாிய ஆலோசனைகள் வழங்குதல் போன்றவை இந்நாளின் முக்கியத்துவமாக கருதப்படுகிறது.


இயற்கையின் மிக அழகான படைப்புகளில் பறவைகளும் ஒன்று. சில சமயங்களில் அவை பாா்ப்பதற்கு மிகவும் அழகாகவும், வண்ணமயமாகவும் காட்சி அளிக்கும். ஆனால், இதையெல்லாம் தாண்டி அவை இந்த பூமியின் சுற்றுச்சூழல் அமைப்பின் முக்கிய காரணிகளாகவும் உள்ளன. சங்ககால இலக்கியங்கள் தொடங்கி இன்றைய புறா பந்தயங்கள் வரை பறவைகள் மனிதர்களோடு உறவாடிக் கொண்டிருக்கும் ஒரு ஜீவன். இந்தியாவில் ஆயிரத்துக்கும் அதிகமான அரிய வகை பறவை இனங்கள் உள்ளன. தமிழக வனப்பகுதிகளில் கழுகு, கூழைக்கிடா, பருந்து வண்ண நாரை, கரண்டிவாயன், புள்ளிமூக்கு வாத்து, செந்நீல நாரை, கொக்கு, குயில், அாிவாள் மூக்கன், பாம்புதாரா, நீர்காகம், மயில், ஆந்தை, புறா உள்ளிட்ட பலவகைப்பட்ட பறவை இனங்கள் வாழ்கின்றன. இருப்பினும், நீர்நிலைகளில் தண்ணீர் தட்டுப்பாடு, மரங்கள் அழிக்கப்படுதல், வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களால் அாிய வகை பறவைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது. பறவைகள் இனம் அழிந்து வருவதை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பறவைகள் வாழ்வதற்கும் மரங்கள் மிகவும் அவசியம் எனவே ஒவ்வொருவரும் மரக்கன்று நட வேண்டும் என்று பேசினார். முன்னதாக வானவில் மன்ற கருத்தாளர் தெய்வீக செல்வி எளிய அறிவியல் பரிசோதனை செய்து காண்பித்தார். ஆங்கில ஆசிரியர் சிந்தியா நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad