ராணிப்பேட்டை , ஜன 24 -
ராணிப்பேட்டைமாவட்டம் தமிழ்நாடு துணை முதலமைச்சரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவதும் இளைஞரணி நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி நிர்வாகிகளை சமீபத்தில் நியமனம் செய்திருந்தார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர். கலைஞர்தாசன், துணை அமைப்பாளர்கள். பிரதீப், சொரூபமூர்த்தி, பரத்ராஜ், பாரதி, பிராங்க்ளின், யுவராஜ் ஆகியோர் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் மாநில சுற்றுச்சூழல் துணை செயலாளர். வினோத் காந்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான பெ.வடிவேலு, மாவட்ட நிர்வாகிகள், மற்றும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட
செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக