நெமிலி அருகே செல்வமந்தை கிராமத்தில் புதிய நியாய விலை கடை கட்டித்தர கோரி ஆட்சியரிடம் எஸ்.ஜி.சி பெருமாள் கோரிக்கை மனு!
ராணிப்பேட்டை, ஜன 22 -
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர். சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் நெமிலி ஒன்றியம் செல்வமந்தை ஊராட்சியில் இயங்கி வந்த ரேசன் கடை இடிந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது வாடகை வீட்டில் இயங்கி வரும் ரேசன் கடைக்கு பதில் புதிய முழு நேர நியாய விலை கடை கட்டிடம் கட்டித்தர கோரியும்,
நெமிலி- சேந்தமங்கலம் சாலையில் புதிய வேகத்தடை அமைத்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினார். மாவட்ட ஆட்சியர் கோரிக்கை மனுவை பெற்று பரிசிலிப்பதாக உறுதியளித்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு.பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக