வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் உடனடியாக நிறைவேற்றப்படும். நகர மன்ற தலைவர் தகவல். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வெள்ளி, 24 ஜனவரி, 2025

வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் உடனடியாக நிறைவேற்றப்படும். நகர மன்ற தலைவர் தகவல்.

IMG-20250124-WA0026

வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் உடனடியாக நிறைவேற்றப்படும். நகர மன்ற தலைவர் தகவல்.


திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகர மன்ற சாதாரண கூட்டம் மன்ற அரங்கில் நடைபெற்றது. 


கூட்டத்திற்கு நகர மன்றத் தலைவர் உமா சிவாஜிகணேசன் தலைமை வகித்தார்,  நகராட்சி அணையாளர் முஸ்தப்பா, பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகர பகுதியில் செயல்படுத்த உள்ள பணிகள் மற்றும் வரவு செலவு உள்ளிட்ட 60 தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.


தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் தங்களது வார்டு பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்தனர், இதற்கு பதில் அளித்து பேசிய நகர மன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன்,  மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் மீது உரிய முறையில் பரிசீலித்து அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தரப்படும் என்று கூறினார்.  


கூட்டத்தில் நகர மன்ற  உறுப்பினர்கள் வி.எஸ்.சாரதிகுமார், நாசிர்கான்,  கலைச்செல்வன், தவுலத் பாஷா, ரஜினிகாந்த், பத்மாவதி, பி.முஹம்மத் அனீஸ், ஷாயீன் பேகம் சலீம், ஆஷா பிரியா, ஹபீப் தங்கல், சி.முஹம்மத் நோமான், ஏஜாஸ் அஹமத், கலீம் பாஷா, சித்ரா தென்னரசு,சாந்தி பாபு, மஹபூபுண்ணிசா, பல்கீஸ் சலீம், உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பத்தூர், வாணியம்பாடி செய்தியாளர் R.மஞ்சுநாத் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad