கேரளாவில் இருந்து உணவு கழிவுகளை ஏற்றி வந்த வாகனம் பறிமுதல் - ஒருவர் கைது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வெள்ளி, 17 ஜனவரி, 2025

கேரளாவில் இருந்து உணவு கழிவுகளை ஏற்றி வந்த வாகனம் பறிமுதல் - ஒருவர் கைது.

தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் கேரளாவில் இருந்து உணவு கழிவுகளை ஏற்றி வந்த வாகனம் பறிமுதல் - ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.

ஜனவரி 17, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி கேரளா மாநில எல்லை பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று இரவு பளுகல் பகுதியில் தனிப்படை போலீசார் நடத்திய தீவிர சோதனையில் கேரளாவில் இருந்து உணவு கழிவுகள் கொண்டு வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வாகன ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் திற்பரப்பு முண்டப்பள்ளிவிளை பகுதியை சார்ந்த ஜெயபால் என்பவரின் மகன் ஜெயின்(29) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையானது வரும் நாட்களில் மேலும் தீவிரப்படுத்தப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad