கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் முதலமைச்சரின் திறனறிவு தேர்வு நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் முதலமைச்சரின் திறனறிவு தேர்வு நடைபெற்றது.

 

IMG-20250126-WA0033

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் முதலமைச்சரின் திறனறிவு தேர்வு நடைபெற்றது. 


மாணவர்கள் 100 % ஆர்வமுடன் வருகை தந்து உற்சாகமாக தேர்வை எழுதினர்


கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறிவு தேர்வு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்றது. கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு மையமாக கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டது. இதில் கந்தர்வகோட்டை பகுதியிலுள்ள 10 ஆம் வகுப்பு பயிலும் 109 மாணவர்கள், 101 மாணவிகள் ஆக மொத்தம் 210 மாணவர்கள் தேர்வுகள் எழுதினர். தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது காலையில் 10 மணி முதல் 12.00 மணி வரை கணிதமும் இரண்டாவது தேர்வு மதியம் அறிவியலும், சமூக அறிவியலும் கொண்ட 2 தேர்வுகள் மாணவர்கள் OMR விடைத்தாளில் விடையளிக்கும் வகையில் நடைபெற்றது.


இதில் முதன்மைக் கண்காணிப்பாளராக வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் மு.முத்துக்குமார் செயல்பட்டார். துறை அலுவலராக கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி  ஆங்கில ஆசிரியர் ஜெயக்குமார் பணியாற்றினார்.


கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உயர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 11 பேர் அறைக் கண்காணிப்பாளராக பணியாற்றினர்.


இத்தேர்வு குறித்து ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிவேலு கூறும்போது தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு 2 தாள்கள் கொண்டு கொள்குறி வகையில் நடத்தப்படுகிறது. 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகிறது. இதில் முதல் தாளில் கணிதம் தொடர்பான 60 கேள்விகள் மற்றும் இரண்டாம் தாளில் அறிவியல், சமூக அறிவியல் தொடர்பான 60 கேள்விகள் இடம்பெறும்.  அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இது ஒரு வரப் பிரசாதமாக உள்ளது என்றும் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.


தேர்வு எழுதிய மாணவி எல்லாருடைய அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி காவியா வரும்போது இந்த தேர்வு எங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது எதிர்காலத்தில் அரசன் உயர் பொறுப்புகளுக்கு செல்வதற்கு இந்த தேர்வுகள் வழிகாட்டுகின்றன தேர்வை நடத்திய பள்ளிகளில் துறைக்கும் நடத்த வழிகாட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் மாணவர்கள் சார்பாக நன்றி என்றும் தெரிவித்தார். 


இன்று நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் திறனறிதல் தேர்வு மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டார செயலாளர் ரகமதுல்லா கூறும்போது


மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  அவர்கள் பள்ளிக்கல்வித்துறையில் மாணவ,மாணவியர்களின் திறனைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. புதுமை பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், காலை உணவு திட்டம், உள்ளிட்ட திட்டங்கள் மாணவர்களின் உயர்கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அந்த வரிசையில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 கல்வி ஊக்கத்தொகை வழங்கும் வகையில் தமிழக முதலவரின் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டது.


முதன்முறையாக அரசு பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 கல்வி ஊக்கத்தொகை வழங்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் 2024-25 கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது .இதற்கு தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்து.


அரசு தேர்வு துறையின் வழிமுறைகளின்படி, நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், இத்தேர்வின் மூலம் மொத்தம் 1000 பேர், அதாவது 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டுவார்கள். அவர்களுக்கு மாதம் ரூ.1,000 வீதம் ஒர் கல்வி ஆண்டில் ரூ.10,000 கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad