ஆண்டிபட்டியில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் முன்னாள் தமிழக முதல்வரும் அஇஅ திமுகவின் நிறுவனருமான மறைந்த எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்தநாள் விழா அதிமுக சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவை முன்னிட்டு ஆண்டிபட்டி வைகை சாலையில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர் தலைமையில், ஆண்டிபட்டி அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன் , முன்னாள் எம்எல்ஏ தவசி மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், ,பேரூர் கழகச் செயலாளர் அருண்மதி கணேசன் ஆகியோர் முன்னிலையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து சிலை அருகில் அமைக்கப்பட்டிருந்த திரு உருவ படத்திற்கு மலர் தூவி வாழ்க கோஷத்துடன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். அதனைத் தொடர்ந்து மேலத்தெரு முருகன் கோவில் அருகில் அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் திருவுருவப்படத்திற்கும், நாடார் தெருவில் அமைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கும் அதிமுகவினர் மலர் தூவி இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் . அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட நகர கிளைகளுக்கு செயலாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பு அணி நிர்வாகிகள் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக