அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது , சீமான் மீது கைது நடவடிக்கை நாம் தமிழர் கட்சியினர் திருப்பூரில் திடீர் ஆர்ப்பாட்டம்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததை செய்யப்பட்டதை கண்டித்தும் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டதையும் எப்ஐஆர் பொது வெளியில் வெளியிடப்பட்டதை கண்டித்தும், இந்த பாலியல் வன்கொடுமையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் துரிதமாக கைது செய்யக் கோரியும் திருப்பூர் குமரன் சிலை அருகே திருப்பூர் மாவட்ட தலைவர் ரத்னாமனோகர் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர் தடையை மீறி நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.
இந்த போராட்டத்தில் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இளந்தமிழன் சேக் முகமது, மாநில தொழிற்சங்க பேரவை இணைச் செயலாளர் சுரேஷ் பாபு மாநில கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை செயலாளர் ஈஸ்வரன், வடக்கு மாவட்ட செயலாளர் பழ.சிவக்குமார், வடக்கு தொகுதி செயலாளர் செந்தமிழ் செல்வராஜ் மாநில ,மாவட்ட ,மாநகர, நகர,தொகுதி நிர்வாகிகள், பாசறை நிர்வாகிகள், மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மாவட்ட செய்தியாளர் அகாஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக