திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் காங்கேயம் ரோட்டில் அமைந்துள்ள காயத்ரி ஹோட்டல் அருகில் இருக்கும் ராசி ஃபுட்ஸ் ஹாலில் திருப்பூர் வடக்கு மாவட்ட பொதுக்குழு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வாக
வி கேன்.பாபு
அவர்கள் தலைமையில்
கொடியேற்ற நிகழ்வுடன் எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் துவங்கியது.
வரவேற்புரை
மாவட்ட செயற்குழு உறுப்பினர் இதயத்துல்லா அவர்கள் நிகழ்த்தினார்.
மூன்றாண்டுக்கான திருப்பூர் வடக்கு மாவட்டத்தினுடைய ஆண்டு அறிக்கை
மாவட்ட பொது செயலாளர் அப்துல் சத்தார் அவர்கள் வாசித்தார்கள்.
இந்த நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலத்திலிருந்து புதிய மாவட்ட செயற்குழு உறுப்பினர்களையும் மாவட்ட நிர்வாகிகளையும் தேர்வு செய்து அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிக்கு
வருகை தந்த
மாநில தேர்தல் சிறப்பு அதிகாரிகள்
மாநில செயலாளர் ஷபீக் அகமது அவர்களும் ,
மாநில பொருளாளர் கோவை முஸ்தபா அவர்களும் ,மாநில கட்சி நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி வந்து நடத்தி தந்தார்கள்
வருகின்ற 2025 முதல் 2027 ஆண்டு இறுதி வரை மூன்றாண்டிற்கான புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் எஸ் டி பி ஐ கட்சியின்
மாவட்ட தலைவர்
வி-கேன் பாபு அவர்களும்
மாவட்ட பொது செயலாளர்
அப்துல் வஹாப் அவர்களும்
அமைப்பு பொது செயலாளர்
அப்துல் சத்தார் அவர்களும்
மாவட்டத் துணை தலைவர்
பசீர் அஹமத் அவர்களும்
மாவட்ட செயலாளர்கள்
அக்பர் அலி
ஹிதாயத்துல்லா
மாவட்ட பொருளாளர் ஜாபிர் அஹமத்,
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் திப்பு சுல்தான், ஜாபர் சாதிக் ஆகியோர்
பொறுப்பேற்று கொண்டார்கள் .
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர்
கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக