திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, இருக்கன்துறை ஊராட்சிக்கு உட்பட்ட நக்கனேரி கிராமத்தின் வழியாக குவாரிகளில் இருந்து கனரக வாகனங்களில் ஏற்றி வரப்படும் கல், மண் போன்றவற்றால் தூசு பறந்து காற்று மாசடைவதால் பொதுமக்கள் சுவாச கோளாறு போன்ற பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
அடிக்கடி கனரக வாகனங்கள் ஊருக்குள் வந்து செல்வதால் பொதுமக்களுக்கு போக்குவரத்திற்கு இடையூராகவும், தார் சாலைகள் உடைந்து பழுதடைந்தும் விடுகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.
இதனால் ஆத்திரம் அடைந்த நக்கனேரி ஊர் பொதுமக்கள் நக்கனேரி ஊருக்குள் வந்து செல்லும் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்களை சிறைபிடித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தி தொடர்பாளர் என்.ராஜன், இருக்கன்துறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக