வேலூர்,ஜன.28-
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், பிரம்மபுரம் மதுரா கோரந்தாங்கல் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த ஸ்ரீனிவாசன் த/பெ மூர்த்தி ( வயது 38) என்பவர் ராணுவத்தில் வேலை செய்கிறார் . இவர் பொங்கல் பண்டிகைக்காக வீட்டிற்கு கடந்த 11 .1 .2025 அன்று வந்துள்ளார். இவர் குடும்ப பிரச்சனை காரணமாக பிரம்மபுரம் கிராம சர்வே எண் (68/A)ல் தனது சொந்த நிலத்தில் உள்ள மரத்தில் காலை சுமார் 6 மணி அளவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். ஊர் மக்கள் தகவல் அளித்ததன் பேரில் பிரம்மபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இறந்தவருக்கு குணசுந்தரி என்ற மனைவியும், லட்சுமி என்ற மகளும், தில்சன் என்ற மகனும் உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் பிரம்மபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக