வேலூர் , ஜன 26 -
வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்தில் பல்வேறு வார்டுகளில் முறையான விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகள் ஏதும் இல்லாமல் நடைபெற்ற கிராமசபை (வார்டு சபை) கூட்டங்கள். வேலூர் மாநகராட்சி ராட்சி 1வது மண்டலத்தில் பல்வேறு வார்டுகளில் ஜனவரி 26 முன்னிட்டு கிராமசபை (வார்டு சபை) கூட்டங்கள் நடைபெற்றன.ஆனால் அரசு விதிகளின்படி முன்கூட்டியே எந்த அறிவிப்புகளும்,விளம்பரங்களும் செய்யவில்லை. சம்பிரதாயத்திற்காக கவுன்சிலர்கள் நடத்தியுள்ளனர் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும் நடைபெற்ற கூட்டங்களில் வார்டிற்கு 10 சதவீத மக்கள் பங்கேற்க வேண்டும். அதாவது 5000 மக்கள் தொகை கொண்ட வார்டில் 500 பேராவது குறைந்தபட்சம் கலந்து கொள்ள வேண்டும் விதி உள்ளது. ஆனால் சுமார் 50 பேர் கூட பல இடங்களில் கலந்து கொள்ள வில்லை என்று கூறப்படுகிறது. கவுன்சிலர்கள் கணக்கு காட்டுவதற்கு நடத்தியுள்ள தாகவே தெரிகிறது. இதனால் பொதுமக்கள் மீண்டும் முறையான அறிவிப்பு செய்து கிராம சபை (வார்டு சபை) கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். அப்போது தான் எங்கள் குறைகளை தெரிவிக்க முடியும் என்கின்றனர்.எனவே மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவிச்சந்திரன் அவர்கள் மீண்டும் கிராமசபை கூட்டத்தை மீண்டும் நடத்த வேண்டும். மேலும் மார்ச் - 22,(உலக தண்ணீர் தினம்) , மே - 1 (தொழிலாளர் தினம்),ஆகஸ்ட்-15(சுதந்திர தினம்), அக்டேபர் - 2 (காந்தி ஜெயந்தி)நவம்பர் - 14 ( உள்ளாட்சிகள் தினம்) ஆகிய நாட்களில் தொடர்ந்து இந்த கிராம சபை (வார்டு சபை) கூட்டம் நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நல சங்கம் சார்பிலும கருத்து தெரிவிக்கின்றனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக