கோத்தகிரி சி எஸ் ஐ மேல்நிலைப் பள்ளிகளில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 7 ஜனவரி, 2025

கோத்தகிரி சி எஸ் ஐ மேல்நிலைப் பள்ளிகளில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு

 

IMG-20250107-WA0039

கோத்தகிரி சி எஸ் ஐ மேல்நிலைப் பள்ளிகளில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகரில் அமைந்துள்ள சிஎஸ்ஐ  மேல்நிலைப் பள்ளியில்  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக சுற்றுச்சூழல் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை  திருமதி ஜெப்ரி ப்ரீத்தா  தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் வழக்குரைஞர் உதயகுமார் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர்  கே  ஜே . ராஜு அவர்கள்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  பேசியபோது கூறிய கருத்துக்கள்.....

 

காலநிலை மாற்றத்திற்கு காரணமான அமெரிக்கா சீனா மற்றும் 27 ஐரோப்பிய நாடுகள் போன்ற வளர்ந்த நாடுகள் தான் பசுமைக் குடில் வாயுக்களை அதிகமாக வெளியேற்றுபவை.  அண்மையில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் மகாநாட்டில் வளர்ந்த நாடுகள் தாங்கள் வெளியேற்றும் கார்பன் டை ஆக்சைடுக்கு  அளவாக  அவற்றை ஈர்க்கும் காடுகளை உருவாக்கும் வகையில் இந்தியா போன்ற வளர்ந்து வரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அமெரிக்க அதிபராக வரப்போகும்  டிரம்ப்  காலநிலை மாற்றம் என்பதே  ஒரு போலி அறிவியல்  என்று கூறி நிதி வழங்க மறுத்து விட்ட நிலையில் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் பின் வாங்குவது உலகளாவிய  காலநிலை மாற்ற தடுப்பு முயற்சிக்கு ஒரு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. கடந்த  ஆண்டு வெளியேற்றப்பட்ட கார்பன் டை ஆக்சைடில் 31 சதவீதம் சீனாவும்  13 சதவீதம்  அமெரிக்காவும் 12 சதவீதம் 27 ஐரோப்பிய நாடுகளும் மீதமுள்ள 41% ஏனைய ஏழை நாடுகளால் வெளியேற்றப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் காலநிலை மாற்றத்தின் தீவிரத் தன்மை  உலகெங்கிலும் துவங்கி விட்டது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் மனித குலம் அழிவிற்கு  சுனாமி போன்ற பெரிய பேரிடர்கள்  மட்டுமல்ல வைரஸ்கள் பாக்டீரியாக்கள் போன்ற சிறு பூச்சிகள் கூட கடுமையான தொற்று நோய்களை பரப்பி மனித குலத்தை அழிக்கும் வல்லமை உடையவை எனவும் கூறியுள்ளது. உலகில் ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியன் டன் அளவிற்கு பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றில் 80 சதவீதம்  ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி  குப்பையாக வீசி எறியப்படுபவை. பூமி மட்டும் அல்ல கடல் பரப்பிலும் 40% இடத்தை   இத்தகைய குப்பை பிளாஸ்டிக்குகள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன இத்தகைய மக்காத பிளாஸ்டிக்குகள் சூரிய வெப்பத்தால் மைக்ரோ பிளாஸ்டிக்களாக மாறி கடல் வாழ் உயிரினங்களில் மட்டுமல்ல மனித தாய்ப்பாலிலும் கலந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்பன போன்ற பல சுற்றுச்சூழல் கருத்துக்களை  ஆசிரியர் ராஜூ அவர்கள் கூறினார். முன்னதாக தேசிய பசுமை படைத்திட்ட  அலுவலர் ஆசிரியர் திரு. சுப்ரமணி அனைவரையும் வரவேற்றார். ஆசிரியை பிலோமினா நன்றி கூறினார்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad