அழகப்பா பல்கலைக்கழகத்தில் ப.சிதம்பரம் அவர்களின் தாயாரின் நினைவாக கட்டப்பட்ட 'திருமதி லட்சுமி வளர் தமிழ்' நூலக கட்டிடத்தை பொது பயன்பாட்டிற்கு திறந்து வைத்த தமிழக முதல்வர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் மாண்புமிகு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ப. சிதம்பரம் அவர்களின் தாயார் திருமதி லட்சுமி அவர்களின் நினைவாக தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட "திருமதி லட்சுமி வளர் தமிழ் நூலகத்தை" மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் பொது பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதில் மாண்புமிகு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப. சிதம்பரம் மற்றும் ப. சிதம்பரம் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். மாங்குடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கூட்டணி கட்சிகளையும் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, வட்டார, பேரூர் மற்றும் ஊராட்சிகளின் அனைத்து பிரிவு, துறைகள் மற்றும் அணிகளை சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், அரசு அலுவலர்கள், அழகப்பா பல்கலைக்கழக நிர்வாகிகள் பல்கலைக்கழக பேராசிரியர்கள், காவல்துறையினர் மற்றும் திரை துறையினர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
மேலும் சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் திட்ட பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் அவர்கள் வழங்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக