போயம்பாளையம் பகுதியிலுள்ள பொது மக்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என்ற பாகுபாடு இன்றி, தேச ஒற்றுமையை பறைசாற்றும் விதத்தில் பழனிச்சாமி நகரிலுள்ள பள்ளிவாசலில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்திய பின்னர் அங்கிருந்த பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
குடியரசு தின விழாவை முன்னிட்டு நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் ஈ.பி.அ.சரவணன் மரக்கன்றுகள் வழங்கினார்.
திருப்பூர் வடக்கு மாநகரம் போயம்பாளையம் பழனிச்சாமி நகரிலுள்ள நூருல்ஹூதா சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் முன்பாக 76 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் பள்ளிவாசல் அசரத் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். அதனை தொடர்ந்து பங்கேற்றவர்கள் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் பழனிச்சாமி நகர் பள்ளிவாசல் நிர்வாகிகள் செயலாளர் சேக் அலாவுதீன் பாஷா, தலைவர் முகமது ரவிபிக், பொருளாளர் கமலூதீன், ஷாஜகான், முகமது முகைதீன், செயலானி, பாஷா ,8 வது வட்ட கவுன்சிலர் வேலம்மாள் காந்தி, திமுகழக நிர்வாகிகள் , கங்காநகர் வி.வி.ஜி.காந்தி, தயானந்தம், திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க நிர்வாகிகள் நிறுவனத்தலைவர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன், துணை தலைவர் சின்னத்துரை, பொருளாளர் ராஜசெல்வம், இணை செயலாளர் நாகராஜன், சிபிஐ சசிகுமார், மகாலிங்கம், சிபி எம் நடராஜன்,
மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர்.
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என மத பாகுபாடு இல்லாமல் தேச ஒற்றுமையை பறைசாற்றும் விதத்தில் பள்ளிவாசல்களில் அனைவரும் ஒருங்கிணைந்து தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தி மக்களுக்கு இனிப்புகள் ,மரக்கன்றுகள், வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக