மானாமதுரையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளிவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 10 ஜனவரி, 2025

மானாமதுரையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளிவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறை.

IMG-20250110-WA0094

 மானாமதுரையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளிவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறை. 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் வேதியரேந்தல் அரசு பள்ளியிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் மானாமதுரை சார்பு ஆய்வாளர் திரு ராஜதுரை அவர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அரசு அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக டிப்பர் லாரிகள் மூலம் சுய லாபத்திற்காக கிராவல் அள்ளிக் கொண்டிருந்த இடத்திற்கு சார்பு ஆய்வாளர் சென்ற போது கிராவல் அள்ளிக்கொண்டிருந்த நபர்கள் அருகில் உள்ள கருவேலம் காட்டிற்குள் தப்பி ஓடிச் சென்றுள்ளனர். எனவே சார்பு ஆய்வாளர் திரு ராஜதுரை அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் உடனடியாக முருகன் (35), சதீஷ் (29) ஆகிய இருவர் மீதும் பி.என்.எஸ் 303(2), பழைய ஐ.பி.சி 379 மற்றும் 21(4) மைன்ஸ் ஆக்ட் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், கிராவல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 டிப்பர் லாரி, 1 ஜேசிபி மற்றும் 4 யூனிட் கிராவல் மண் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில் காவல்துறையினர் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad