அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் சிவகங்கை மாவட்ட சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ் தலைமையில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் மாவட்ட சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ் தலைமை வகித்து, மாணவ மாணவிகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளுக்கான TNPSC, UPSC, RRB, SSC மற்றும் சிவில் சர்வீஸ் போட்டி தேர்வு பற்றியும், தொழில் முனைவோருக்கான திட்டங்கள், தொழில் முனைவோருக்கான தொழில் வாய்ப்புகள் பற்றி எடுத்துரைத்தார். இதில் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி மாணவ மாணவிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு பற்றியும், தொழில் முனைவோருக்கான திட்டங்கள், அதை எப்படி செயல்படுத்துவது என்று தன் வாழ்த்துரையில் எடுத்துக் கூறினார்.
மேலும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மணி கணேஷ், மாணவ மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்பு பற்றி எடுத்துரைத்தார். மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் கண்ணன் மாணவ மாணவ மாணவிகளுக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலில் உள்ள தொழில் முனைவோருக்கான திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். மேலும், திருநெல்வேலி ஹரிபாஸ்கர் ,உதவி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டல் மையத்தின் இயக்குநர், மாணவ மாணவிகளுக்கு பல்வேறு வேலை வாய்ப்பு பற்றிய இணையதள முகவரி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி பற்றிய பாடங்கள், Python, C++, SQL, etc மற்றும் தொழில் சார்ந்த இணையதளங்கள் NISM, SEBI பற்றி எடுத்துரைத்தார். போட்டித் தேர்வுப் பாடங்களுக்கான புத்தகங்கள் கொண்ட கண்காட்சியையும் மாணவர்கள் பயன்பாட்டிற்காக சார் ஆட்சியர் திறந்து வைத்தார். முன்னதாக "வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறன்கள்" என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தொழில் நிர்வாகவியல் துறை முதலாம் ஆண்டு மாணவி மலர்விழி மற்றும் இரண்டாம் பரிசு பெற்ற முதலாம் ஆண்டு கணிதத்துறை மாணவி அனுக்கிரக லட்சுமி மற்றும் மூன்றாம் பரிசு பெற்ற முதலாம் ஆண்டு முதுகலை ஆங்கில இலக்கிய மாணவி ஹரிஷ் சுமிதா அனு ஆகியோருக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இறுதியாக இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் கோகிலா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, நன்றி கூறினார். இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அழகப்பா அரசு கலைக் கல்லூரி வேலைவாய்ப்பு பயிற்சி மைய உறுப்பினர்கள் ஆங்கிலத்துறை இணைப் பேராசிரியர் முனைவர். கவிதா, தொழில் நிர்வாகவியல் துறைத் தலைவர் முனைவர்.தியாகராஜன், மற்றும் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர். வேலாயுதராஜா ஆகியோர் செய்து இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக