மானாமதுரையில் 2024 ஆம் ஆண்டு சிறப்பாக பணியாற்றிய துணை காவல் கண்காணிப்பாளருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை துணை காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் திரு பி. நிரேஷ். இவர் 2024 ஆம் ஆண்டு மானாமதுரையில் ரவுடிசத்தை கட்டுப்படுத்தி சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாத்து நிலைநாட்டி சிறப்பாக பணியாற்றியமைக்காக, சிவகங்கையில் நடைபெற்ற இந்திய திருநாட்டின் 76 ஆவது குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப மற்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஆஷிஷ் ராவத் இ.பா.ப ஆகியோரிடம் பாராட்டு சான்றிதழை பெற்றுக்கொண்டார்.
பாராட்டு சான்றிதழ் பெற்ற மானாமதுரை துணை காவல் கண்காணிப்பாளர் திரு நிரேஷ் அவர்களுக்கு காவல்துறையினர் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் பாராட்டு சான்றிதழ் பெற்ற கையோடு தனக்கு மிகச் சிறப்பான ஒத்துழைப்பு அளித்துவரும் ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினருக்கு தன்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக