நாம் தமிழர் கட்சியின் பின்னலாடை மற்றும் நூற்பாலை தொழிலாளர்கள் சங்க அலுவலகம் திறப்பு விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

ஞாயிறு, 19 ஜனவரி, 2025

நாம் தமிழர் கட்சியின் பின்னலாடை மற்றும் நூற்பாலை தொழிலாளர்கள் சங்க அலுவலகம் திறப்பு விழா.

IMG-20250118-WA0001(1)

திருப்பூர் ஓடக்காடு பகுதியில் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பின்னல் ஆடை மற்றும் நூற்பாலை தொழிலாளர்கள் சங்க அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. தொழிற்சங்க மாநில இணை செயலாளர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார் மாநில தலைவர் அன்பு தென்னரசன் அலுவலகத்தை திறந்து வைத்தார். பொது செயலாளர் சுரேஷ் குமார் பெயர் பலகையை திறந்து வைத்தார். அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் தற்போது நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு உழைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மேலும் பின்னலாடை மற்றும் நூற்பாலை தொழிலாளர்களுக்கு என தனி வாரியம் அமைக்க வேண்டும். திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனை திறக்கப்பட்டு பல மாதங்களாகியும் அறுவை சிகிச்சை உள்ளிட்ட உயிர் காக்கும் உயர் சிகிச்சை துவங்கப்படவில்லை அத்தகைய சிகிச்சை வழங்கும் முழுமையான மருத்துவமனையாக இ எஸ் ஐ மருத்துவமனையை மாற்ற வேண்டும். திருப்பூர் பின்னலாடை தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். தொழில் நிறுவன முதலாளிகள் 90% தமிழ் தொழிலாளர்களையே பணிக்கு அமர்த்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, தொகுதி, மாநகர, தொழிற்சங்க, மற்றும் பாசறை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad