அனுப்பர்பாளையம் நூற்றாண்டு விழா பள்ளி துவக்க நாளை முன்னிட்டு மூன்றாவது முறைக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் 14 வது வார்டில் உள்ள அனுப்பர்பாளையம் துவக்க பள்ளியில் இன்று 2-1-2025 பள்ளி துவக்க நாளை முன்னிட்டு பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர் பெருமக்களுடன் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு மூன்றாம் முறைக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் மு.ரத்தினசாமி மற்றும் நிர்வாகிகள் தலைமை ஆசிரியர் திருமதி கே.ஞானலட்சுமி ,
வேலுச்சாமி, மணிமாறன், கஜேந்திரன், மற்றும் ஆசிரியர் பெருமக்களும் கலந்து கொண்டனர். திருப்பூர் மாநகராட்சி ஒன்னாவது மண்டலம் 14 வது வார்டில் உள்ள இந்த மாநகராட்சி துவக்கப்பள்ளி பல சோதனைகளை கடந்து சாதனை புரிந்து நூற்றாண்டுகள் கடந்து வெற்றிகரமாக நவீன கல்வி உபகரணங்கள் கொண்ட பள்ளியாக வெற்றிகரமாக இயங்க பெரிதும் துணை நிற்கும் நல்லுள்ளம் படைத்த ஆசிரிய பெருமக்கள் எந்த ஒரு பிரதிபலன் பாராமல் தன் சொந்த பணத்தில் பள்ளி வளர்ச்சி பணிகளை செய்து கொடுத்து உதவும் பெற்றோர் ஆசிரியர் சங்க
நிர்வாகிகள் பள்ளிக்கு தேவையான பொருட்களை தந்து உதவி செய்யும் நல்லுள்ளம் படைத்த நன்கொடையாளர்கள் ஆதரவு இந்த பள்ளிக்கு கிடைத்தது மிகப்பெரிய ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பிரமாண்டமாக நடைபெறும் ஆண்டு விழா நிகழ்ச்சி அதில் இந்த பள்ளியின் திறமை மிக்க பள்ளி குழந்தைகள் பங்கு பெறும் கலை நிகழ்ச்சிகள் மிகப்பெரிய பள்ளிகளில் நடை பெறுவது போல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக