சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரி சார்பாக தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விழா. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 12 ஜனவரி, 2025

சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரி சார்பாக தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விழா.

சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரி சார்பாக தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விழா.

சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியின் தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ரா.ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை வகித்தார் தமிழரின் பாரம்பரியம் பற்றி மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார். 

சிறப்பு விருந்தினராக ஸ்ரீருவைகுண்டம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் பி.ஜி.ரவி மாணவர்களுக்கு வாழ்த்துரை கூறினார் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் ஜெபதங்கம் பொங்கலின் சிறப்பை பேசினார். 

சாயர்புரம் பேரூராட்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பொன்சேகர் தமிழர் சிறப்பை பற்றி பேசினார்.மாணவ மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டு பாரம்பரிய உடையை அணிந்து கொண்டாடினார்கள். சாயர்புரம் பாஸ்ட்ரேட் செயலாளர் அபிஷேகம் சாயர்புரம் பாஸ்ட்ரேட் 

பொருளாளர் ஜான்சன் ரபேல் மருத்துவமனை மேலாளர் ஷாம் கல்லூரி சிறப்பு பொறியாளர் தீபக்ராஜ் கல்லூரி துறை தலைவர்கள் பேராசிரியர்கள் கல்லூரி ஊழியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad