திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, இருக்கன்துறை ஊராட்சிக்கு உட்பட்ட இருக்கன்துறை கிராம நிர்வாக அலுவலகமானது மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்லும் இடமான கிராம நிர்வாக அலுவலகம் பொதுமக்களுக்கும் அங்கு பணிபுரியும் அலுவலர்களுக்கும் பாதுகாப்பின்றி அபாயகரமாக எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ள இருக்கன்துறை கிராம நிர்வாக அலுவலகத்தை இடித்து விட்டு புதியதாக கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டப்பட்டால் இருக்கன்துறை ஊர் பொதுமக்கள் மிகுந்த பயன் பெறுவார்கள்.
திருநெல்வேலி மாவட்ட செய்தி தொடர்பாளர் என்.ராஜன், இருக்கன்துறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக