வாகன நெரிசலை போக்க மேம்பாட்டு பணிகள்? கடும் விமர்சனத்திற்கு ஆளாகும் நெடுஞ்சாலை துறை - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 23 ஜனவரி, 2025

வாகன நெரிசலை போக்க மேம்பாட்டு பணிகள்? கடும் விமர்சனத்திற்கு ஆளாகும் நெடுஞ்சாலை துறை

 
IMG-20250123-WA0197

வாகன நெரிசலை போக்க மேம்பாட்டு பணிகள்?  கடும் விமர்சனத்திற்கு ஆளாகும் நெடுஞ்சாலை துறை !!!!!


நீலகிரி மாவட்டம் உதகை சேரிங்கிராஸ் பகுதியில், ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட ஆதம் செயற்கை நீரூற்று உள்ளது. உதகையின் நுழைவு வாயிலில் அமைந்துள்ள இந்த நீரூற்று பாரம்பரிய மிக்க சின்னங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.உதகையின் நுழைவுவாயில்நகரத்தின்அடையாளமாக ஆதம் நீரூற்று உள்ளது. இந்த நீரூற்று சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இரவு நேரங்களில், விளக்கு ஒளியில் ஜொலிக்கும் இந்த நீரூற்றின் அருகில் நின்று புகைப்படம் எடுப்பது சுற்றுலா பயணிகளின் வழக்கம் அப்பகுதியை மாவட்ட, நகராட்சி நிர்வாகங்கள் பாதுகாத்து வருகின்றன. இந்நிலையில், உதகை நகரின் அடையாளமான இந்த நீரூற்று பகுதியை ஒட்டியுள்ள மகாத்மாகாந்தி சிலை அமைக்க பட்டுள்ள இடத்தில் இருந்த செடிகளுடன் இருந்த அலங்கார தடுப்பு நெடுஞ்சாலை துறையால் இரவோடு இரவாக அகற்ற பட்டது .


அப்பகுதி அலங்கோலமாகி உள்ளது. இதற்கு சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர் .ஆதம் நீரூற்றை சுற்றிலும்  உள்ள பூங்கா பகுதியும்  சிறியதாக மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.ஆதம் நீரூற்றை சுற்றிலும்  உள்ள நடைபாதையில் சுற்றுலா பயணிகள் இரவு நேரத்தில் நடந்து, நீரூற்று முன் நின்று புகைப்படம் எடுப்பார்கள். இரவு நேரத்தில் ஒளி வெள்ளத்தில் இந்த நீரூற்றை காண்பது அழகு. இத்தகைய எழில்மிகு பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெறும் பணிகள் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளது. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக  நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் ,என். வினோத்குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad