தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புத்தக வெளியீட்டு விழா!
காட்பாடி ,ஜன 12 -
வேலூர் மாவட்டம் காட்பாடி
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் சி.ராமலிங்கம் எழுதிய விரியும் பிரபஞ்சம் என்ற வானியியல் கேள்வி பதில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு வி.அம்பிகா தலைமை தாங்கினார். முன்னதாக தென்சென்னை மாவட்ட அறிவியல் இயக்க பொறுப்பாளர் ராஜசிம்மன் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு அரசின் மாதிரி பள்ளிகள் விண்வெளி அறிவியல் ஒருங்கிணைப்பாளர் பா.ஸ்ரீகுமார் நூலை வெளியிட, வேலூர் மாவட்ட செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் பெற்றுக் கொண்டார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அறிவியல் வெளியீடு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுப்ரமணி, சென்னை மாவட்ட வெளியீடு ஒருங்கிணைப்பாளர் தேவபிரகாஷ், பாரதி புத்தகாலயம் ஒருங்கிணைப்பாளர் ரவி, குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஏ.மங்கையர்க்கரசி, மாநில பொருளாளர் எஸ்.சுதாகர், தென்சென்னை மாவட்ட செயலாளர் தேன்மொழி, தேவதாஸ் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.
முடிவில் கவிதா நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக