இராமநாதபுரம் நகராட்சி பெண்கள் அரசு மேல் நிலை பள்ளியில் மாணவியர்க்கு தேவையான. அடிப்படை வசதிகள் செய்து தர கோரி, மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் மனு,
இராமநாதபுரம் நகரில் அமைந்துள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு 40.ஆண்டுகள் ஆகிவிட்டது இங்கு 900 மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.இங்கு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஆசிரியர்கள் பற்றாக்குறை இல்லாமல் உள்ளது. , 11, 12 ம் வகுப்பு மாணவியர்களுக்கு ஆங்கிலம் பயில கல்வி ஆசிரியர் இல்லாமலும் வெளியே உள்ள தனியார் பள்ளியை நாடி செல்ல வேண்டிய நிலை உள்ளது 900 மாணவியர் ஒரு உடற்பயிற்சி ஆசிரியர் மட்டுமே உள்ளதனால் தேவையான உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் விளையாட்டு மைதானம்,கூடுதல் கழிப்பறை வசதிகள் செய்துதரம் மேலும் குறைவாக உள்ள வகுப்பரைகள் கூடுதல் வகுப்ரை கட்டிடம் கட்டி தரவும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் இடத்தில் இராமநாதபுரம் சமூக ஆர்வலர் அஜ்மல் சரிபு என்பவர் கோரிக்கை மனு அளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக