குடும்ப அட்டைதாரர்களுக்கு கற்பகம் கூட்டுறவு பண்டக சாலையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல்!
வேலூர்,ஜன 9 -
வேலூர் மாவட்டம், அண்ணா கூட்டுறவு பண்டக சாலையில் உள்ள நியாய விலை கடையில் (09.01.2025) அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, வேலூர் கூட்டுறவு பண்டக சாலையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர், சுஜாதா ஆனந்தகுமார் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மண்டல குழு தலைவர் வீனஸ் நரேந்திரன், கூட்டுறவு
சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுணஐயப்பதுரை, வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிட் இணை பதிவாளர் இராமதாஸ், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இணைப்பதிவாளர் சந்தானம், ஆர்.டிஓ. பாலசுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி அரசு துறை சார்ந்த பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக