குடியாத்தம் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வனப்பகுதி மரத்தில் கேமரா பொருத்திய வனத்துறையினர்!
குடியாத்தம் ,ஜன 4 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப் பகுதியை ஒட்டியுள்ள காந்தி கணவாய் எர்த்தாங்கல் தனகொண்ட பள்ளி சைனகுண்டா ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ள நிலையில் அவ்வப்போது விளை நிலங்கள் மற்றும் மேச்சலுக்காக விடப்பட்டுள்ள கால்நடைகளை தாக்கி வருவதும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால் வனப்பகுதி ஓரம் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பீதீயடைந்து வருகிறார்கள்
காந்தி கணவாய் பகுதிகளில் அடிக்கடி சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள் இந்நிலையில் நேற்று மாலை நிலங்களில் 10 க்கும் மேற்பட்ட ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தது அப்போது திடீரென ஆடுகள் பதறி அடித்து ஓடி வரவே அங்கிருந்து விவசாயிகள் சென்று பார்த்தபோது ஒரு ஆட்டின் உடம்பில் ரத்த காயங்கள் கட்சிக் கொண்டிருந்தது இதனால் சிறுத்தை தாக்கி இருக்குமா என்ற பீதியில் ஆடுகளை வீட்டுக்கு ஓட்டிச் சென்று விட்டார்கள் இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் பீதியில் உள்ளனர் தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் கால் தடயங்களை சோதனை மேல் கொண்டனர் மேலும் அப்பகுதியில் உள்ள மரத்தில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கும் கேமரா பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக