திண்டுக்கல்லில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் பணியாளர்களுக்கு கட்டணமில்லா உடல் பரிசோதனை:
திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் கோவில் பணியாளர்களுக்கு கட்டணம் இல்லா முழு உடல் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை முகாம் இன்று ஜனவரி 7 செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
இந்த முகாமை மண்டல இணை ஆணையர் கார்த்திக் தொடங்கி வைத்தார். உதவி ஆணையர் லட்சுமிமாலா, தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ்பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி கன்வர் பீர்மைதீன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக