ஜன. 22, செய்துங்கநல்லூர் செயின்ட் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில், திருநெல்வேலி மாவட்டம் நெடுஞ்சாலை துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் சாலை விபத்துக்கான காரணம், வாகனங்களை ஓட்டுவதில் கவனம், பாதுகாப்பு வழிமுறைகள், பேருந்தில் பயணம் செய்யும் போது எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
18 வயதுக்கு குறைவான மாணவர்கள் பயன்படுத்துவது தவறு. படிக்கட்டில் பயணம் செய்த மாணவரின் நிலை போன்ற நேரடி காட்சிகளின் தொகுப்புகளை வீடியோ காட்சிகள் மூலம் விளக்க படம் காட்டினர்.
மேலும் இந்நிகழ்வில் சாலை பாதுகாப்பை பின்பற்றாத மாணவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை சுட்டி காட்டி, பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில் திருநெல்வேலி நெடுஞ்சாலை துறை கூடுதல் கோட்ட பொறியாளர் சசிகலா, உதவி பொறியாளர்கள் லக்ஷ்மி பிரியா, செல்வன், இளநிலை அலுவலர் சங்கர் ஆகியோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் அறிவுறுத்தல் படி, நிர்வாக அலுவலர் ஜூலியன், கல்லூரி முதல்வர் ஜான் பால், துணை முதல்வர் ஜாய்ஸ் மேரி, துறை தலைவர்கள், ஆசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக