அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் ஜி.கே.விவசாய மணி (எ) ஜி.சுப்பிரமணி அவர்களின் 59 வது பிறந்த நாளை முன்னிட்டு சங்க நிர்வாகிகள் திருப்பூர் ரோட்டரி ஐ.எம்.ஏ இரத்த வங்கியுடன் இணைந்து இரத்த தான முகாம் பிரிட்ஜ்வே காலனியில் உள்ள சங்க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமை அலுவலக பொறுப்பாளர் தினேஷ்குமார் ஏற்பாடு செய்தார். இந்த முகாமை நிறுவன தலைவர் ஜி.கே.விவசாய மணி (எ) ஜி.சுப்பிரமணி அவர்கள் துவக்கி வைத்தார். தலைமை ஆலோசகர் முன்னிலை வகித்தார். இதில் 59 இரத்த நன் கொடையாளர்கள் இரத்த தானம் செய்தனர். மற்றும் வயதானவர்களுக்கும் , பொதுமக்களுக்கும் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது. முகாம் முடிந்தவுடன் சான்றிதழ் நிறுவன தலைவரால் வழங்கப்பட்டது . உடன் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
தமிழக குரல் மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக