சிவகங்கையில் நடைபெற்ற 'வன உயிரின வார விழா' போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்ற பாபா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 17 ஜனவரி, 2025

சிவகங்கையில் நடைபெற்ற 'வன உயிரின வார விழா' போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்ற பாபா மெட்ரிக் பள்ளி மாணவர்கள்

 

3a52a913-8b8f-48d9-b771-e27446ccabb2

சிவகங்கையில் நடைபெற்ற 'வன உயிரின வார விழா' போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்ற பாபா மெட்ரிக் பள்ளி மாணவர்கள்.


தமிழ்நாடு வனத்துறை சிவகங்கை வனச்சரகம் சார்பாக 'வன உயிரின வார விழா' சிவகங்கையில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்றது. 


இதில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியை சேர்ந்த 5-ஆம் வகுப்பு மாணவன் கே. பிரத்யூன் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவி எம். சோபிகா ஓவியப்போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசும் பெற்றனர். 


இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வனச்சரக அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மாவட்ட வனச்சரக அலுவலர் திரு சு. பார்த்திபன் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார். வெற்றி பெற்று பள்ளி திரும்பிய மாணவர்களை பள்ளியின் சார்பாக பள்ளியின் தாளாளர் திரு ஆர். கபிலன், பள்ளியின் நிர்வாகி திருமதி ஆர். மீனாட்சி மற்றும் பள்ளியின் முதல்வர் திருமதி எம். சாரதா, ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad