குடியாத்தம் , ஜன 7 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம்
கே வி குப்பத்தை அடுத்த துருவம் பகுதியில கடந்த மாதம் சிறுத்தை தாக்கி இளம் பெண் பலியான சம்பவத்தை தொடர்ந்து குடியாத்தம் கே.வி.குப்பம் காட்பாடி உள்ளிட்ட வனப் பகுதிகளில் ஒட்டிய கிராமங்களில் அதிக அளவு சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகவும்
சிறுத்தை தொடர்ந்து ஆடு மாட்டு கன்றுக்குட்டி கோழி உள்ளிட்டவட்டை தாக்கி பலியான சம்பவத்தால் கிராம மக்கள் அச்சமடைந்த நிலையில் சிறுத்தை கண்காணிக்கவும் சிறுத்தை பிடிக்கவும் வனப்பகுதியில் டிராப் கேமரா மற்றும் அந்த டூரோன் கேமரா உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில்
மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவின் பேரில் தனியார் தொழில்நுட்ப வல்லுநருடன் சேர்ந்து வனத்துறையினர் குடியாத்தம் அருகே உள்ள காந்தி கணவாய் பகுதியில் ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் கேமரா மற்றும் ஒலிபெருக்கி வைத்து நிலையில்
ஏ ஐ தொழில் நுட்பத்தில் வைக்கப்பட்ட கேமரா சிறுத்தை பதிவு செய்தவுடன் தானாக ஒலியை எழுப்பி சிறுத்தை காட்டுக்குள் விரட்டி அடித்த காட்சிகள் தற்போது அங்கு வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவு ஆகி உள்ளது மேலும் அந்தப் பகுதியில் தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக