காட்டுப்பன்றிகளை சுடலாம் - சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு.
தமிழகத்தில் காட்டுப்பன்றிகளால் விவசாயம் அதிகம் பாதிப்பதுடன் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. காட்டுப்பன்றிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தினால் வன சட்டத்தின்படி அபராதம் சிறை தண்டனை ஆகியவை வழங்கப்படும். இந்நிலையில் சட்டசபையில் மாண்புமிகு அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவிக்கையில் காப்புக்காடுகளில் இருந்து மூன்று கிலோமீட்டர்களுக்கு அப்பால் காட்டுப்பன்றிகளை சுடலாம் என தெரிவித்தார். ஏற்கனவே பிற மாநிலங்களில் இந்த நடைமுறை அமலில் உள்ள நிலையில் தமிழக அரசும் விவசாயத்திற்க்கும் மனிதர்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ள காட்டுப்பன்றிகளை சுடலாம் என்ற அறிவிப்பு தமிழக விவசாயிகளை சற்றே ஆறுதலடைய வைத்துள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக