புளியங்குடியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் தற்கொலை - போலீசார் தீவிர விசாரணை. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 4 ஜனவரி, 2025

புளியங்குடியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் தற்கொலை - போலீசார் தீவிர விசாரணை.

புளியங்குடியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் தற்கொலை - போலீசார் தீவிர விசாரணை.

புளியங்குடி, ஜன 4: புளியங்குடி-சிந்தாமணியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் உள்ளவர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியது.

சிந்தாமணி செண்பகவள்ளி ஓடை தெருவை சேர்ந்தவர் பெருமாள். [விவசாயி] . இவருக்கு செல்வக்குமார், கார்த்திக்கேயன் என்ற இரண்டு மகன்களும் ராஜேஸ்வரி என்ற மகளும் உண்டு. கடைசி மகன் கார்த்திகேயன் அருகிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். 

சம்பவத்தன்று காலை கார்த்திகேயன் பள்ளிக்கு சென்று விட்டு மதியம் 12 மணிக்கு சாப்பிட வீட்டுக்கு வந்து இருக்கிறான். மாடியில் சென்று ரூமில் இருந்தவன் வெகு நேரம் வெளியில் வரவில்லை. அதனை தொடர்ந்து அவனது அம்மா , மற்றும் அக்கா ஆகியோர் சென்று பார்த்த போது கழுத்தில் ஷால் நெறித்தபடி கொடியில் சாய்ந்து கிடந்தான். 

உடனே அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது அவனை பரிசோதித்த டாக்டர் அவன் இறந்து விட்டதாக தெரிவித்தார். உடனடியாக புளியங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இன்ஸ்பெக்டர் சாம் சுந்தர் உத்தரவின் பேரில் எஸ்ஐ மாடசாமி மற்றும் காவலர்கள் விரைந்து சென்று அவனது உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

கார்த்திகேயன் எதனால் எப்படி இறந்தான், ? வீட்டில் , பள்ளியில் ஏதேனும் பிரச்சினையா என்று போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் பத்தாம் வகுப்பு நன்கு படிக்கும் மாணவன் திடீரென தற்கொலை செய்து கொண்டது பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad